பெயரில் என்ன இருக்கின்றது?
நீர் தெளித்து மூன்றுமுறை
கூப்பிட்டு பெயரிட்டனர்.
பெயர் வாழ்க்கை அளித்த
தீட்டப்படாத ஒவியம்.
அனைவரும் அழைத்தனர் அப்பெயரால்
வளர்ந்தது ஒவியம்.
சேர்த்தேன் எண்ணற்ற அனுபவங்களை
பல வண்ணங்களாய்
உணர்ச்சிகளை கலவையாய் கொட்டினேன்
அதில் ரசித்து.
எண்ணங்களால் வரைந்தேன் ஒவியத்தின்
நான்கு மூலைகளில்
நீண்டு வளர்ந்தது ஒவியம்
தன் போக்கில்.
அழித்து வரைய எனக்கு
ஒரு அனுமதியில்லை.
அடுத்தவர் தூரிகை படுவதை
தடுக்க முடியவில்லை.
காலங்கள் விரைவாய் கடந்தன
என்னிடம் விடை பெறாமலே
பார்கிறேன் இன்று நான்
அந்த ஒவியத்தை
முடிந்த ஒவியம் எப்படி?
அது என் அடையாளமா?
கிடைத்த பதில் (முதலில்) இருந்த
வெற்றிடமே மேல்.
நீர் தெளித்து மூன்றுமுறை
கூப்பிட்டு பெயரிட்டனர்.
பெயர் வாழ்க்கை அளித்த
தீட்டப்படாத ஒவியம்.
அனைவரும் அழைத்தனர் அப்பெயரால்
வளர்ந்தது ஒவியம்.
சேர்த்தேன் எண்ணற்ற அனுபவங்களை
பல வண்ணங்களாய்
உணர்ச்சிகளை கலவையாய் கொட்டினேன்
அதில் ரசித்து.
எண்ணங்களால் வரைந்தேன் ஒவியத்தின்
நான்கு மூலைகளில்
நீண்டு வளர்ந்தது ஒவியம்
தன் போக்கில்.
அழித்து வரைய எனக்கு
ஒரு அனுமதியில்லை.
அடுத்தவர் தூரிகை படுவதை
தடுக்க முடியவில்லை.
காலங்கள் விரைவாய் கடந்தன
என்னிடம் விடை பெறாமலே
பார்கிறேன் இன்று நான்
அந்த ஒவியத்தை
முடிந்த ஒவியம் எப்படி?
அது என் அடையாளமா?
கிடைத்த பதில் (முதலில்) இருந்த
வெற்றிடமே மேல்.