எது கனவு?
வண்ண மலர் கூட்டம்
நிறைந்த தோட்டம்
தேன் வழியும் அந்த
பூக் கூட்டம்
சிறகடித்து பறந்தேன் நான்
வண்ணத்துப் பூச்சியாய்
தாவினேன் மலருக்கு மலர்
பருகினேன் தேன்
வயிறு நிறைந்தது திகட்டும்
சுவைத் தேனால்
மனம் நிறைந்தது கூடி
திரிந்த கூட்டங்களால்
வந்தது விழிப்பு நான்
இருப்பது மானிடனாய்
முன்னிற்பது என் உறவுகள்
திகைப்பாய் நோக்கி
என்னுள் எழுந்தது கேள்வி
நினைவுக் குழப்பத்தினால்
நான் மனிதனா பட்டாம்பூச்சியா
எது கனவு ?
(மூலக் கரு ஜேன் கதை- பட்டாம் பூச்சி)
வண்ண மலர் கூட்டம்
நிறைந்த தோட்டம்
தேன் வழியும் அந்த
பூக் கூட்டம்
சிறகடித்து பறந்தேன் நான்
வண்ணத்துப் பூச்சியாய்
தாவினேன் மலருக்கு மலர்
பருகினேன் தேன்
வயிறு நிறைந்தது திகட்டும்
சுவைத் தேனால்
மனம் நிறைந்தது கூடி
திரிந்த கூட்டங்களால்
வந்தது விழிப்பு நான்
இருப்பது மானிடனாய்
முன்னிற்பது என் உறவுகள்
திகைப்பாய் நோக்கி
என்னுள் எழுந்தது கேள்வி
நினைவுக் குழப்பத்தினால்
நான் மனிதனா பட்டாம்பூச்சியா
எது கனவு ?
(மூலக் கரு ஜேன் கதை- பட்டாம் பூச்சி)