சமுதாயம்
கைபிடித்து சென்றது களிப்புடன் நடந்தேன்
காட்டின வழியில் வாழ்ந்து வந்தேன்
இலக்கென்று சொன்ன திசை ஓடினேன்
இன்பமென்று சொன்ன பொருளுக்கு ஆசைப்பட்டேன்
பதவியென்று பலமூட்டியது பதறியே பாடுபட்டேன்
பாசமென்று காட்டியதை பற்றிப் பிடித்தேன்
தலைவனென்று தாங்கினின்றது தவிப்புடன் உழைத்தேன்
அடக்கம் என்றது பணிந்து நின்றேன்
எளிமை என்றது ஏழையாய் நின்றேன்
ஆனால்,.........
கைபிடித்தது என்னைக் கட்டுப்படுத்த
வழிகாட்டியது மாற்றுவழியை மறைக்க
இலக்கென்றது இல்லாததைக் காட்ட
இன்பமென்றது வரும்துன்பத்தை மறைக்க
பதவியென்றது பலவீனத்தை வளர்க்க
பாசமென்றது துரோகத்தை விதைக்க
தலைவனென்றது தள்ளிவிட என்னை
அடக்கமென்றது அடக்கி வைக்க
எளிமையென்றது எள்ளி நகையாட
அறிந்தேன் சூதை இன்று
அடைந்தேன் புரிதல் நன்று
என்னுடன் வருவது விழிப்புணர்வே.
காட்டின வழியில் வாழ்ந்து வந்தேன்
இலக்கென்று சொன்ன திசை ஓடினேன்
இன்பமென்று சொன்ன பொருளுக்கு ஆசைப்பட்டேன்
பதவியென்று பலமூட்டியது பதறியே பாடுபட்டேன்
பாசமென்று காட்டியதை பற்றிப் பிடித்தேன்
தலைவனென்று தாங்கினின்றது தவிப்புடன் உழைத்தேன்
அடக்கம் என்றது பணிந்து நின்றேன்
எளிமை என்றது ஏழையாய் நின்றேன்
ஆனால்,.........
கைபிடித்தது என்னைக் கட்டுப்படுத்த
வழிகாட்டியது மாற்றுவழியை மறைக்க
இலக்கென்றது இல்லாததைக் காட்ட
இன்பமென்றது வரும்துன்பத்தை மறைக்க
பதவியென்றது பலவீனத்தை வளர்க்க
பாசமென்றது துரோகத்தை விதைக்க
தலைவனென்றது தள்ளிவிட என்னை
அடக்கமென்றது அடக்கி வைக்க
எளிமையென்றது எள்ளி நகையாட
அறிந்தேன் சூதை இன்று
அடைந்தேன் புரிதல் நன்று
என்னுடன் வருவது விழிப்புணர்வே.