இசைவு
மகனாய் பிறந்தேன் தந்தை
சொல் கேட்டு நடந்தேன்
சிறுவனாய் இருந்தேன் சுற்றத்தொடு
விளையாடி இன்பம் கண்டேன்
மாணாக்கனாய் படித்தேன் அறிவியல்
நுணுக்கங்கள் பல அறிந்தேன்
வாலிபனாய் வளர்ந்தேன் ஈட்டினேன்
பொருள் வேலை செய்து
குடும்பத் தலைவனானேன் கடமைகள்
பலவும் செய்தேன் உவந்து
ஒவ்வொறு செயலும் இழுத்ததே
என்னை பல திசைகளில்
இழுத்த இடம் எல்லாம்
ஒடி களைத்ததே மனம்
அறிந்து கொண்டேன் பின்
வாழ்வின் போக்கினில் சென்றேன்
தடைபடாமல் சென்றதே ஓட்டம்
இலகுவானதே என் மனம்
சொல் கேட்டு நடந்தேன்
சிறுவனாய் இருந்தேன் சுற்றத்தொடு
விளையாடி இன்பம் கண்டேன்
மாணாக்கனாய் படித்தேன் அறிவியல்
நுணுக்கங்கள் பல அறிந்தேன்
வாலிபனாய் வளர்ந்தேன் ஈட்டினேன்
பொருள் வேலை செய்து
குடும்பத் தலைவனானேன் கடமைகள்
பலவும் செய்தேன் உவந்து
ஒவ்வொறு செயலும் இழுத்ததே
என்னை பல திசைகளில்
இழுத்த இடம் எல்லாம்
ஒடி களைத்ததே மனம்
அறிந்து கொண்டேன் பின்
வாழ்வின் போக்கினில் சென்றேன்
தடைபடாமல் சென்றதே ஓட்டம்
இலகுவானதே என் மனம்