நம்பிக்கை
நிழல்
மாடங்கள் பல கட்டிடுவேன் நான்
நாளை மன்னனாக வாழ்ந்திடுவேன்
வாகனங்கள் பல வாங்கிடுவேன் நான்
நாளை வஞ்சமில்லாமல் ஓட்டிடுவேன்
நூல் பல படித்திடுவேன் நான்
நாளை அறிஞனாய் மாறிடுவேன்
தொலை தூரப் பயணங்கள் சென்றிடுவேன்
நாளை அளவில்லாமல் மகிழ்ந்திடுவேன்
பாடுபட்டு அயராமல் உழைத்திடுவேன் நான்
நாளை கோடீஸ்வரனாய் ஆகிடுவேன்
நிஜம்
நாளை நாளை என்றிருந்தேன் நான்
நாளை என்றும் வரவில்லையே
சிந்தனை என்னை எமாற்றியதே எனக்கு
மாற்றம் ஒன்றும் ஏற்படலையே
இன்று ஒன்றே நித்யம் எனக்கு
இக்கணம் ஒன்றே சத்தியம்
நான் நானாயிருந்தேன் எப்பொழுதும் எனக்கு
நிரந்தரம் என் விழிப்புணர்வே.
மாடங்கள் பல கட்டிடுவேன் நான்
நாளை மன்னனாக வாழ்ந்திடுவேன்
வாகனங்கள் பல வாங்கிடுவேன் நான்
நாளை வஞ்சமில்லாமல் ஓட்டிடுவேன்
நூல் பல படித்திடுவேன் நான்
நாளை அறிஞனாய் மாறிடுவேன்
தொலை தூரப் பயணங்கள் சென்றிடுவேன்
நாளை அளவில்லாமல் மகிழ்ந்திடுவேன்
பாடுபட்டு அயராமல் உழைத்திடுவேன் நான்
நாளை கோடீஸ்வரனாய் ஆகிடுவேன்
நிஜம்
நாளை நாளை என்றிருந்தேன் நான்
நாளை என்றும் வரவில்லையே
சிந்தனை என்னை எமாற்றியதே எனக்கு
மாற்றம் ஒன்றும் ஏற்படலையே
இன்று ஒன்றே நித்யம் எனக்கு
இக்கணம் ஒன்றே சத்தியம்
நான் நானாயிருந்தேன் எப்பொழுதும் எனக்கு
நிரந்தரம் என் விழிப்புணர்வே.