பாஷோ
(மொழிபெயர்ப்பு எனது பார்வையில்)
o ஆன்மாக்களின் விழாக்காலம்
இன்றுகூட தகன மேடையில்
புகை வருகின்றது.
o திரும்பு இந்தப் பக்கம்
நானும் தனிமையில் இருக்கின்றேன்
இலையுதிர்கால மாலைப் பொழுது.
o வருடாந்திர சுத்திகரிப்பு
மரங்களின் நடுவில்
பலத்த காற்று.
o சோம்பேறி
படுக்கையில் இருந்து எழுந்தது
முதல் மழை.
o சில நொடிகள்
பூக்கள் மேல் தொங்கும்
இரவு நிலவு.
o சோகத்தில் மூழ்கி
என் தனிமையை உணரவைக்கும்
மலைக்குயில்.
o சோறு கொடுத்த நண்பர்கள்
இன்று எனது விருந்தினர்கள்
நிலவை ரசிக்க.
o வயல் குருவிகள்
தேயிலைத் தோட்டத்தில்
அதன் புகலிடம்.
o வலுவிழந்த காற்று
வண்ணக்கலவை சேர்த்ததா
காலம் மாறிப் பூத்த பூக்கள்.
o கடவுள் சென்றுவிட்டார்
எல்லாவற்றிலும் தனிமை
இறந்த இலைகள்.
o என் மனதை அறி
ஒரு மலருடன்
ஒரு பிச்சைப் பாத்திரம்
.
o அவை மறக்கச் செய்கின்றன
கோடைகால வெப்பத்தை
சமவெளியின் காட்டுப் பூக்கள்.
o இன்று மட்டும்
நாம் குழந்தைகளாய் இருப்போம்
முதல் மழைத் துளிகள்.
o குழந்தைகள்
பூக்கள் மலர்ந்தன
பழத்தோலை உரிக்கின்றேன்.
o காலை உற்சாகங்கள்
அவர்களும்
என் நண்பர்களில்லை.
o மிதஞ்சூட்டுப் போர்வையில்
இறகுகளின் ஆடையில்
வாத்தின் கால்.
o முதல் பனி
பாலத்தின் பூச்சு
கட்டுமானப் பணியில்.
o எல்லோரும் செல்கிறார்கள்
பாலத்திற்கு நன்றிசொல்லி
பனி மூடிய பாதை.
o புதர்களின் மறைவில்
தேயிலை பறிப்பவர்கள் கேட்டார்களா?
குயிலின் குரல்.
o வாழ்க்கை பயணம்
சிறு வயலின் உழவு
முன்னும் பின்னும்.
(மொழிபெயர்ப்பு எனது பார்வையில்)
o ஆன்மாக்களின் விழாக்காலம்
இன்றுகூட தகன மேடையில்
புகை வருகின்றது.
o திரும்பு இந்தப் பக்கம்
நானும் தனிமையில் இருக்கின்றேன்
இலையுதிர்கால மாலைப் பொழுது.
o வருடாந்திர சுத்திகரிப்பு
மரங்களின் நடுவில்
பலத்த காற்று.
o சோம்பேறி
படுக்கையில் இருந்து எழுந்தது
முதல் மழை.
o சில நொடிகள்
பூக்கள் மேல் தொங்கும்
இரவு நிலவு.
o சோகத்தில் மூழ்கி
என் தனிமையை உணரவைக்கும்
மலைக்குயில்.
o சோறு கொடுத்த நண்பர்கள்
இன்று எனது விருந்தினர்கள்
நிலவை ரசிக்க.
o வயல் குருவிகள்
தேயிலைத் தோட்டத்தில்
அதன் புகலிடம்.
o வலுவிழந்த காற்று
வண்ணக்கலவை சேர்த்ததா
காலம் மாறிப் பூத்த பூக்கள்.
o கடவுள் சென்றுவிட்டார்
எல்லாவற்றிலும் தனிமை
இறந்த இலைகள்.
o என் மனதை அறி
ஒரு மலருடன்
ஒரு பிச்சைப் பாத்திரம்
.
o அவை மறக்கச் செய்கின்றன
கோடைகால வெப்பத்தை
சமவெளியின் காட்டுப் பூக்கள்.
o இன்று மட்டும்
நாம் குழந்தைகளாய் இருப்போம்
முதல் மழைத் துளிகள்.
o குழந்தைகள்
பூக்கள் மலர்ந்தன
பழத்தோலை உரிக்கின்றேன்.
o காலை உற்சாகங்கள்
அவர்களும்
என் நண்பர்களில்லை.
o மிதஞ்சூட்டுப் போர்வையில்
இறகுகளின் ஆடையில்
வாத்தின் கால்.
o முதல் பனி
பாலத்தின் பூச்சு
கட்டுமானப் பணியில்.
o எல்லோரும் செல்கிறார்கள்
பாலத்திற்கு நன்றிசொல்லி
பனி மூடிய பாதை.
o புதர்களின் மறைவில்
தேயிலை பறிப்பவர்கள் கேட்டார்களா?
குயிலின் குரல்.
o வாழ்க்கை பயணம்
சிறு வயலின் உழவு
முன்னும் பின்னும்.