நான் தலைவனில்லை
நான் ஒரு
தலைவனில்லை
நடத்திச் செல்ல
பாதையில்லை
அடிமைப் படுத்த
தொண்டனில்லை.
மயக்க கவர்ச்சி
மந்திரமில்லை
அபிஷேகம் செய்ய
உருவமில்லை
பிரபலமாக பண
பலமில்லை
ஆட்டிப் படைக்க
அதிகாரமில்லை.
வெற்றிகொள்ள எனக்கு
எதிரியில்லை
உற்சாகத்தில் மிதக்க
பானங்களில்லை
இலக்குகள் அடைய
லட்சியங்களில்லை
ஊறித் திளைக்க
உணர்ச்சிகளில்லை
பரிதவிக்க மனதில்
குழப்பங்களில்லை
ஓதி உணர
மந்திரங்களில்லை
கட்டிக் காக்க
சடங்குகளில்லை
விழிப்புக் கடலில்
நீந்தும்
நான் ஒரு
வெற்றிடம்.
நான் ஒரு
தலைவனில்லை
நடத்திச் செல்ல
பாதையில்லை
அடிமைப் படுத்த
தொண்டனில்லை.
மயக்க கவர்ச்சி
மந்திரமில்லை
அபிஷேகம் செய்ய
உருவமில்லை
பிரபலமாக பண
பலமில்லை
ஆட்டிப் படைக்க
அதிகாரமில்லை.
வெற்றிகொள்ள எனக்கு
எதிரியில்லை
உற்சாகத்தில் மிதக்க
பானங்களில்லை
இலக்குகள் அடைய
லட்சியங்களில்லை
ஊறித் திளைக்க
உணர்ச்சிகளில்லை
பரிதவிக்க மனதில்
குழப்பங்களில்லை
ஓதி உணர
மந்திரங்களில்லை
கட்டிக் காக்க
சடங்குகளில்லை
விழிப்புக் கடலில்
நீந்தும்
நான் ஒரு
வெற்றிடம்.