கடவுளுடன் ஒப்பந்தம்
கூவி விற்றான் வியாபாரி
வாங்க எனக்கும் ஆசை
கிடைக்குமா இது இலவசமாய்?
உலகில் எதுவும் கிடைக்காது
விலை நீயும் கொடுக்காமல்.
“கேட்டது அனைத்தயும் தருகிறேன்
அதற்கு மேலும் தருகிறேன்” -
மேலிருந்து வந்தது குரல்
அது ஆண்டவன் குரல்.
என் கட்டளையை கடைபிடிப்பாய்
எனக்கு நீயும் கீழ்ப்படிவாய்.
காட்டுவேன் உனக்கு சொர்க்கம்
இல்லையேல் கிடைக்கும் நரகம்.
கடவுள் போட்ட ஒப்பந்தம்.
கட்டிப் போட்டது மனதை.
எனக்குள் எழுந்தது சந்தேகம்
யார் இந்த கடவுள்?...................
கூவி விற்றான் வியாபாரி
வாங்க எனக்கும் ஆசை
கிடைக்குமா இது இலவசமாய்?
உலகில் எதுவும் கிடைக்காது
விலை நீயும் கொடுக்காமல்.
“கேட்டது அனைத்தயும் தருகிறேன்
அதற்கு மேலும் தருகிறேன்” -
மேலிருந்து வந்தது குரல்
அது ஆண்டவன் குரல்.
என் கட்டளையை கடைபிடிப்பாய்
எனக்கு நீயும் கீழ்ப்படிவாய்.
காட்டுவேன் உனக்கு சொர்க்கம்
இல்லையேல் கிடைக்கும் நரகம்.
கடவுள் போட்ட ஒப்பந்தம்.
கட்டிப் போட்டது மனதை.
எனக்குள் எழுந்தது சந்தேகம்
யார் இந்த கடவுள்?...................