யதார்த்தங்கள்
(பாஷொவின் ஹைக்கு – எனது பார்வையில், மொழி பெயர்ப்பு)
- ஒன்றும் நடக்கவில்லை
வந்தது சென்றது நேற்று
மிளகு ரசம்
- மழை சத்தம்
முன்மாதிரியே நானொரு
பழைய மரக்கட்டை
- யதையாவது சொல்
உதடுகள் உறைகின்றன
பனிக்காற்று
- கனவுகளைவிட
திருப்த்தி அளிக்கிறது
நிஜ ஆந்தை
.
- மின்மினிப் பூச்சிகள்
நிலவைப் போல்
இந்த வயல்வெளியில்.
- இதைப் போல்
ஒப்பிட எதுவுமில்லை
மூன்றாம் பிறை.
- புனிதமானது
பச்சை இலைகள், துளிர்கள்
சூரிய ஒளியில்.